LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

திருவோணம் நட்சத்திரம் - பொதுப்பலன்கள்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


9/6/2014, 3:13 pm

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்கள்:

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும். இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடலில் தொடை, தொடை எலும்பு சுரப்பிகள், முட்டிகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் ஜீ, ஜே, ஜோ, கா ஆகியவை தொடர் எழுத்துக்கள் க,கா,கி,கீ ஆகியவை.

குண அமைப்பு:

திருவோண நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வல்லல் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் இதமாக பேசி பழகுவார்கள். ஒணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்தவொரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொருத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.

குடும்பம்:

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களால் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். மனைவி மீதும் தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். 16 வயது முதல் 23 வயது வரை தேவையற்ற நட்பால் பாதை மாறக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்ற மடைவார்கள். நீண்ட தலை முடியும், அழகிய முகமும் இருக்கும். சில நேரங்களில் முன்னுக்கு முரணாக பேசுவதால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆடை ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். மனைவிக்கு பயந்து நடப்பதுடன் அவள் மீது அதிக பாசமும் வைத்திருப்பார்கள், பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்கள். நவீன ரக வீட்டு பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். குடும்பத்தின் ஆதரவை பெற்று சீரும் சிறப்பாக வாழ்வார்கள் உறவினர்களையும் நேசிப்பார்கள்.

தொழில்:

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர்களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில் நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஒவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள். 24 வயதிலிருந்து நல்ல மாற்றங்களும் வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

நோய்:

திருவோண நட்சத்திரகாரர்களுக்கு அடிக்கடி உடல் நிலையில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் சிறுநீரக கோளாறு உண்டாகும். மனக்குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும். சிலருக்கு பரம்பரை வியாதிகளான சர்க்கரை வியாதி ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

திசைப் பலன்கள்:

திருவோண நட்சத்திரதிபதி சந்திரன் என்பதால் முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகளும், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.

இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.

மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்க மானப் பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.

நான்காவதாக வரும் குரு திசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.

ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயரும் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:

திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசற்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

விருட்சம்:

திருவோண நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை செப்டம்பர் மாதம் இரவு 9.30 மணிக்கு மேல் உச்சியில் காணலாம்.

பரிகார ஸ்தலங்கள்:

திருமுல்லைவாயில்:

சென்னைக்கு மேற்க்கில் ஆவடியை ஒட்டியுள்ள ஸ்தலம் மாசில மணீசுவரர்&கொடியிடை நாயகி அருள் பாலிக்கும் எருக்கல் செடியை தல விருட்சமாக கொண்ட ஸ்தலம்

எருக்கத்தம் புலியும்:

கடலூர் மாவட்டம் விருதாசலத்திற்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள ராஜேந்திர பட்டினம் என்ற எருக்கத்தம் புலியூரில் நீல கண்டேசு வரும் நீலமலர் கண்ணி அம்பிகையும் அருள் பாலிக்கும் திருத்தலம்.

கூறவேண்டிய மந்திரம்:

சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லடம்
விஷணும் கமலபத்ராஷம்
தீயா யேத் கருட வாகனம்

பொருந்தாத நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.
You cannot reply to topics in this forum