LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

இந்த வார ராசி பலன்(18.7.2014 முதல் 24.7.2014 வரை)

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


18/7/2014, 4:59 pm

மேஷம்

பொது: சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. தக்க நபர்களின் உதவியோடு உங்களின் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

பெண்களுக்கு: கணவர் எதிர்பார்த்தபடியே பாசமாக இருப்பார். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இன்றி நடக்கும்.

ரிஷபம்

பொது: பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனை தீரும். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலக சூழல் மாறும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிலருக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். வியாபாரிகள் லாபம் பெறுவர்.

மிதுனம்

பொது: ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு விருது கிடைக்கலாம். தீய நட்பில் இருந்து தள்ளியே இருப்பது நல்லது. பயணங்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: உறவினர்களை அனுசரித்துச் சென்று பிரச்சனைகளை தவிர்க்கவும். கணவர் பாசமாக இருப்பது மனதிற்கு தெம்பாக இருக்கும். மகள் அல்லது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் பெறக்கூடும். வியாபாரிகள் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும்.

கடகம்

பொது: சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழக்கூடும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். பண வரவு தாமதமாகும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு: குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். பிறகு செய்யலாம் என்று நினைத்த வேலை ஒன்றை உடனே செய்து முடிக்க வேண்டி இருக்கும். வியாபாரிகள் தைரியமாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

சிம்மம்

பொது: சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மீக பலம் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். உடன் பிறப்புகளால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான உறவு சுமாராகத் தான் இருக்கும். அதனால் அவரை அனுசரித்துச் செல்லவும். கடன் தொல்லை இருக்காது. குடும்பத்தில் சிறு பிரச்சனை ஏற்படலாம்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு எதிர்பார்த்தபடியே பதவி உயர்வு கிடைத்து மிகழக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து நடந்து கொள்வீர்கள்.

கன்னி

பொது: சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். மகான்களை சந்தித்து ஆசி பெறக்கூடும். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். மனம் அமைதியாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பத்தாருடன் வெளியூர் சென்றுவர திட்டமிடுவீர்கள். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைத்து மகிழக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான அதிநவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: எந்த வேலையையும் புரிந்து கொண்டு பதட்டமில்லாமல் செய்யவும். சக ஊழியர்கள் தானாக வந்து உதவி செய்வார்கள். உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யக்கூடும்.

துலாம்

பொது: பண வரவு அதிகரிக்கும். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு: குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். கடன் தொல்லைகள் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீரும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். குதூகலமாக காணப்படுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

பொது: நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். உங்களின் திறமை பளிச்சிடும். பிறருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள்.

பெண்களுக்கு: விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். சேமிப்பு செலவாகலாம்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் மெச்சும்படி நடந்து கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

தனுசு

பொது: எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் பெரிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உடல் நலனை மேம்படுத்த யோகா செய்வீர்கள்.

பெண்களுக்கு: குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்வீர்கள். குடும்ப ஒற்றுமையை காக்க பாடுபடுவீர்கள். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடக்கூடும். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். முக்கிய பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். உயர் அதிகாரிகளால் பிரச்சனை ஏற்படலாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் பிரச்சனை இன்றி நடக்கும்.

மகரம்

பொது: சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக நினைத்த காரியம் ஒன்று நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல தகவல் ஒன்று உங்களைத் தேடி வரும்.

பெண்களுக்கு: கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்துவிட்டு அல்லாட வேண்டாம். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலைகளை புரிந்து கொண்டு செய்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

கும்பம்

பொது: தர்ம காரியங்கள் செய்வீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: கடன் தொல்லைகள் ஏற்படலாம். கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிலும் நிதானமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனமாக இருக்கவும். இல்லை என்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சக ஊழியர்களை நம்ப வேண்டாம். வியாபாரிகளுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

மீனம் பொது: பண வரவுக்கு குறைவிருக்காது. சிலர் புதிய வாகனம் வாங்கக்கூடும். உடன் பிறப்புகள் பாசமாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். பெண்களுக்கு: குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கணவர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கடன் தொல்லை இருக்காது. பேச்சில் இனிமை தேவை. வேலை பார்ப்போருக்கு: புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
You cannot reply to topics in this forum