LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

பித்ரு தோஷம் என்றால் என்ன?

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


25/7/2014, 7:10 pm

சோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றும் தோஷம் என்றும் சில அமைப்புகள் உண்டு. இதில் "பித்ரு தோஷம்" என்று ஒரு அமைப்பை நாம் கேள்விப் பட்டிருப்போம். இது நமது முன்னோர்கள் செய்த பாவத்தின் வினை என்றும், அவர்களின் கடைசி கால கடமை, காரியங்களை சரியாக கவனிக்காததால் வரும் சாபம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், "பித்ரு தோஷம்" என்பது விதியை மதியால் வென்று சாகா வரம் பெற்ற நமது முன்னோர்களின் மறுஜென்ம அவதாரம் என்பதுதான் சோதிட சாஸ்திரம் கூறும் உண்மையாகும். அதாவது, ஒரு ஆத்மா தனக்கு பொருந்தாத காலகட்டத்தில் பிறந்து தனது விருப்பங்கள் நிறைவேறாமல் இறந்து போனால், அந்த ஆத்மா தனக்கு சாதகமான கால கட்டத்திற்காக காத்திருந்து, பொருத்தமான நபரை தேர்வு செய்து தனது நிறைவேறாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்தப் பூமியில் மீண்டும் பிறப்பெடுக்கும் என்பதே மறுஜென்மம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஒருவர் ஏற்கனவே ஓட்டுப் போட்டதை அறிய ஆள்காட்டி விரலில் கருப்பு மை வைப்பது போல், ஒருவர் ஏற்கனவே பிறந்தவர் என்பதை அறிய அவரது ஜாதகத்தில் சில கிரக அமைப்புகள் இருக்கும், அதுதான் "பித்ரு தோஷம்" எனப்படும்.

இதை எப்படி அறிவது என்றால்?... ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சூரியன், கேது மற்றும் ராசிக்கு ஐந்தாம் அதிபதி, லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி மற்றும் எட்டாம் அதிபதிகள் இணைந்து 1,5,7,9 ஆகிய ஒன்றில் இருக்கப் பிறந்தவர்கள் முன்ஜென்ம குறை தீர்க்க மீண்டும் பிறந்தவர்கள் ஆவார்கள். இந்த கிரகங்களின் சேர்க்கை ஏன் கவனிக்க வேண்டும் என்றால்? ஒரு ஆத்மாவானது இந்தப் பூமியில் ஏற்கெனவே பிறந்தது என்பதை உணர்த்த ஆத்மகாரகன் சூரியனும், நமது பூர்வீக குடியைச் சேர்ந்த பிறவி என்பதை உணர்த்த பூர்வபுண்ணிய அதிபதிகளும், முன்ஜென்ம நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவர ஞான மோட்சகாரகனும், இரட்டை ஆயுள் பெற்றவர் என்பதை அறிய எட்டாம் அதிபதியும் ஒன்றாக இணைவார்கள் என்பது விதி. மேலும் கேதுவுடன் இருக்கும் எல்லா கிரகங்களும் நேருக்குநேர் ராகுவைப் பார்வை செய்யும். ராகு என்பவர் சாகா வரம் பெற்ற கிரகம் ஆகும். எனவே மேற்சொன்ன கிரகங்கள் ராகுவை பார்க்கும் நிலையில் ஜனனமாகும் ஒருவர் சாகா வரம் பெற்ற மறுஜென்ம பிறவி ஆவார்.

அவ்வாறு மீண்டும் பிறந்தவர்களின் ஆரம்ப வாழ்க்கை முறையானது முன்ஜென்ம வாழ்கையுடன் தொடர்புடையதாக இருந்து, அதைத்தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். மேலும் மறுஜென்மம் எடுக்கும் ஒரு ஆத்மாவுக்கு புத்திர பாக்கியம், திருமண பந்தம், குடும்ப வாழ்க்கை போன்ற சாதாரண மனித இன்பங்களில் நாட்டம் இருக்காது. இவர்கள் எதற்காக பிறந்தார்களோ அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வார்கள். இவர்களின் நடவடிக்கைகள் நமக்கு புரியாத வகையில் மர்மம் நிறைந்ததாக இருக்கும். பிறரின் கவனத்தை திசை திருப்புவதாக இருக்கும். எப்போதும் தனித்து வாழ விரும்புவார்கள். ஆனால் பொது வாழ்க்கையில் சிறப்படைவார்கள். இது அவர்களுடைய உலகம். இது அவர்கள் விரும்பிப் பெற்ற பிறப்பு, விரும்பியதை அடையும் காலம். அஷ்ட லட்சுமிகளும் இவர்களுக்கு துணை நிற்கும். எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது விருப்பத்திற்கு செயல்படுவார்கள்...

சரி, இந்த "பித்ரு தோஷ" கிரக அமைப்பை வைத்து ஒருவர் மறு ஜென்மம் என்பதை அறியலாம். ஆனால் அவர் யாருடைய மறு ஜென்மம்? என்பதை அறிவது மிகவும் சிரமமானது. ஏனென்றால்? ஒரு ஆத்மா எப்போது பிறப்பெடுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதேபோல் நமது பாட்டனுக்கு முப்பாட்டன் எப்படி வாழ்ந்தார் என்பதும் நமக்கு தெரியாது. அதனால்தான் இதற்கு "பித்ரு தோஷம்" என்று சொல்லி பரிகாரங்கள் மூலம் பிறவிப் பயனை நிவர்த்தி செய்ய முயன்றனர் சில ஜோதிடர்கள்.

எனவே, உங்கள் ஜாதகத்தில் அல்லது உங்கள் உறவினர்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷ அமைப்பு காணப்பட்டால் அவர்களை போற்றுங்கள். அவர்கள் உங்கள் முன்னோர்களின் ஆத்மா... உங்களை சரியாக வழிநடத்த பிறந்தவர்கள்... எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களோ தெரியாது... எத்தனையாவது முறையாக பிறப்பெடுத்துள்ளார்கள் என்பதும் தெரியாது. எனவே அவர்களோடு பழகுவதற்கும், வாழ்வதற்கும் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

பித்ருக்கள் நமது முன்னோர்கள்.! முன்னோர்களை வழிபடுவோம்.! அவர்கள் நம்மை வழி நடத்துவார்கள்!!.
You cannot reply to topics in this forum