LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சித்திரை நட்சத்திரம் - பொதுப்பலன்கள்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


9/6/2014, 2:50 pm

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்கள்:

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினான்காவது இடத்தைப் பெறுவது சித்திரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இந்த நட்சத்திரதின் 1,2 ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கும், 3,4&ம் பாதங்கள் துலா ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் 1,2&ம் பாதங்கள் தொந்தி அடிவயிறு போன்றவற்றையும், 3,4&ம் பாதங்கள் சிறு நீரகம், பிறப்புறுப்பு, அடிவயிறு போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பே, போ, ர, ரி போன்றவை. தொடர் எழுத்துக்கள், பை, பௌ போன்றவையாகும்.

குண அமைப்பு:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் முன்கோபம் அதிகமிருக்கும். அழகிய உடல் வாகும், நீலவிழியும், கட்டான உடலமைப்பும், சிறந்த ஒழக்கமும் அமைந்திருக்கும். பலவகை கலையம்சம் கொண்ட ஆடை அணிகலன்களை விரும்பி அணிபவர்களாக இருப்பார்கள். பிரபஞ்சம் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். தெய்வ பக்தியும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் பிறருக்கு கொடுத்து உதவக் கூடிய தாராள குணமும் இருக்கும். சொன்ன சொல்லை தன் தலையை வைத்தாவது காப்பாற்றுவார்கள். நல்ல அறிவு கூர்மையும் நடைமுறையை பற்றி பேசுபவர்களாகவும் இருப்பார்கள். வாசனை பொருட்களை விரும்பி உபயோகிப்பார்கள்.

குடும்பம்:

தெரிந்தோ தெரியாமலோ சில நட்சத்திரங்களைப் பற்றி தவறான பழ மொழிகள் வழங்கி வருகின்றன. சித்திரைக்கு அப்பன் தெருவிலே என்ற பழமொழியும் இதில் ஒன்று. ஆனால் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான குடும்பமும் தந்தை தாய்க்கு குறையில்லா வாழ்க்கையும் அமையும். மனைவியின் மேல் அதிக பிரியம் உடையவராகவும் மனைவியின் பேச்சை கேட்பவராகவும் இருப்பார்கள். பரம்பரை கௌரவத்தை எளிதில் விட்டு கொடுக்க மாட்டார்கள் நந்தி வாக்யம் என்ற நூலில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பற்றி கூறுகையில் பாதி வாழ்க்கை சுக போகமாகயும் மீதி வாழ்க்கை துறவறத்திலும் கழியும் என்று கூறுகிறது. அதிகம் பேசுபவராக இருந்தாலும் அதில் அர்த்தம் நிறைய இருக்கும். 23 வயது வரை கொஞ்சம் கஷ்டமும் சிறு சிறு விபத்துக்களும், பொருள் அழிவும் கெட்ட நண்பர்களின் சகவாசமும் இருக்கும் என்றாலும் அதன் பிறகு வாழ்வில் ராஜயோகமும், செல்வம் செல்வாக்கும் உயர் வடைந்து அனைவரும் அண்னாந்து பார்க்கும் உயரத்திற்கு வந்து விடுவார்கள். மணவாழ்க்ககை சற்று தாமதமாகவே அமையும்.

தொழில்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த துறையை சார்ந்திருந்தாலும் அதில் சாதனைகள் பல செய்ய கூடிய வல்லமையை பெற்றிருப்பார்கள். எதிலும் முதலிடத்தை பிடித்துவிடுவார்கள். பல பட்ட படிப்புகள் படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கும் படிப்பிற்கும் சம்மந்தம் இருக்காது. எல்லோரிடத்திலும் கனிவாக பேசி வேலை வாங்குவார்கள். பலரை வைத்து நிர்வகிக்க கூடிய நிர்வாகத் திறன் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்கள். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்து கொண்டேயிருப்பதால் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலையும் நிறையவே இருக்கும் தொழில் மீது அதிக பற்று உள்ளவர்களாக இருப்பதால் தங்களுடைய தூக்கத்தைக் கூட தூக்கி யெறிந்து விட்டு பணி புரிவார்கள் மக்களால் போற்றி புகழ் கூடிய அளவிற்கு வாழ்வில் உயர்வடைவார்கள்.

நோய்கள்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் வியாதியும், சிறு நீரக பாதிப்பும், கர்ப்பப்பை, சிறு நீர் குழாய்கள் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும். உடலில் நீர் சத்து குறைவு, ஹார்ட் அட்டாக், வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், அப்பன்டிஸ் போன்றவற்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை, ரத்த சம்மந்தப் பட்ட பாதிப்புகள் போன்றவை உண்டா-கும்.

திசைப்பலன்கள்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் வருட காலம் 7 என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு மீதமுள்ள தசா புக்திகளை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் மட்டுமே இளமை கால வாழ்வில் கல்வியில் முன்னேற்றமும், சுகவாழ்வும் கிட்டும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் கல்வியில் ஈடுபாடு இருக்காது. பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களிடம் அவப் பெயரை எடுக்க நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் அதனால் வம்பு வழக்குகளும் ஏற்படும்.

அடுத்து 3&வதாக வரும் குரு திசை காலங்கள் 16 வருடம் நடைபெறும். இத்திசை காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி முன்னேற்றமான நிலை, முரட்டு சுபாவம் மறைந்து அனைவரிடமும் அன்பாக பழகும் பண்பு உண்டாகும். சுகவாழ்வும் கிட்டும்.

நான்காவதாக வரும் திசை சனி திசையாகும். இது 19 வருட காலங்கள் நடைபெறும் சனி திசை மாராக திசை என்றாலும் சனி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பலவகையில் மேன்மைகளும் சமுதாயத்தில் உயர்வும் உண்டாகும். உடனிருப்பவர்களால் உயர்வுகள் கிட்டும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயர்வடையும்.


ஸ்தல விருட்சம்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் வில்வ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரம் மீனின் கண் போல பளிச்சென்று இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இரவு சுமார் ஒரு மணிக்கு உச்சிக்கு நேராக விண்ணில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:

சித்திரை நட்சத்திரத்தில் திருமணம் பூ முடித்தல், குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் வைத்தல், புது மனை புகுதல், அன்னதானம் செய்தல், கல்வி, ஜோதிடம், மருத்துவம், சங்கீதம் வண்டி வாகனங்கள் வாங்குவது, நாட்டிய அரங்கேற்றம் போன்றவற்றை தொடங்கலாம். புத்தகம் வெளியிடுதல், குளம் கிணறு வெட்டுதல் தானியத்தை களஞ்சியத்தில் சேர்த்தல் போன்ற வற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்:

அண்ணன் கோயில்:

நாகை, சீர்காழிக்கு தென் கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள திருமால் கோயில்

நன்னிலம்:

மயிலாடுதுறை, திருவாரூர் இடையேயுள்ள செஞ்சடை நாதர்&பெரிய நாயகி திருக்கோயில்

நாச்சியார் கோயில்:

கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 9 கி.மீ தொலைவிலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் தாயாரை மணம் புரிந்த காட்சியிலுள்ள கோயில்

திரு நெடுங்களம்:

திரு வெறும்பூருக்கு கிழக்கே 10.கி.மீ தொலைவிலுள்ள நித்ய சுந்தரர்&ஒப்பிலா நாயகி திருக்கோயில்

திருக்கோயிலூர்:

பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த விரட்டுடேசுவரர் சிவானந்த வல்லி திருக்கோயில்

திருநாராயணபுரம்:

கரூர்&முசிறிக்கு மேற்க்கில் 15.கி.மீ தொலைவில் காளமேக பெருமாள்&பூதேவி&ஸ்ரீதேவி சந்நிதி

திருக்கண்டியூர்:

வடக்கில் 10.கி.மீ தொலைவிலுள்ள சிரக் கண்டீசுவரர்&மங்கள நாயகி திருக்கோயில்

கூற வேண்டிய மந்திரம்:

ஓம் நமோ பகவதே, மஹா ஸீதர் சனாய தீப்த்ரே
ஜ்வாலா பரீதாய ஸர்வ திக்ஷோபணகராய
ஹீம் பட் ப்ரஹ்மனே பரஞ் ஜ்யோ திஷே நம!

சித்திரை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்:

அவிட்டம், மிருகசீரிஷம், போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.
You cannot reply to topics in this forum