LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

ஜாதகத்தில் யோகங்கள்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:05 am

தர்ம கர்மாதிபதி யோகம்:

ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.

அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள் நிறுவி, பொதுத்தொண்டு செய்வார்கள். ஆலயப் பணி செய்வார்கள். கோயில் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும். தன் சொந்த செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய தகுதி உண்டாகும். சிலர் தினமும் அன்னதானம் செய்வார்கள். தன் சொத்தில் ஒரு பகுதியை கோயில் திருப்பணிக்காக எழுதியும் வைப்பார்கள்.
Astrologer••• 2
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:07 am

2. கஜ கேசரி யோகம்:

ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில், அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசியலில் உயர் பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி, கல்வியில் உயர்வு, ஆகியவை ஏற்படும். மேலும், சொந்தமாக பல வீடுகள், வாகன யோகங்களையும் தரும். அதே சமயம் எதிரிகளும் உருவாகுவார்கள். ஆனால், அவர்கள் இவர்களிடம் தோற்றுபோவார்கள்.
Astrologer••• 3
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:09 am

குரு சந்திர யோகம்:

சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் , 9 - ம் வீட்டில் குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும்.

இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் தங்களுடைய 40 -வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள்.
Astrologer••• 4
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:10 am

சந்திரமங்கள யோகம்:

ஜாதகத்தில், செவ்வாய், சந்திரனுக்கு அதாவது ராசிக்குக் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 - வது வீட்டில் நின்றால் இந்த யோகம் ஏற்படும். இது திருமணத்துக்குப் பிறகு ஜாதகனுக்கு நல்ல உயர்ந்த அந்தஸ்தைத் தரும்.
Astrologer••• 5
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:12 am

குரு மங்கள யோகம்:

ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்து நின்றாலோ அல்லது, ஒருவருக்கொருவர் எதிரில் நின்றாலோ, இந்த யோகம் ஏற்படும்.

இந்த அமைப்பில் பிறந்தவர்கள், தான் செய்யும் தொழிலில் உயர்வுபெற்று, பல தொழில்களாக விரிவுபெற்று நல்ல ஒரு தொழிலதிபராக முன்னுக்கு வருவார்கள்.
Astrologer••• 6
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:14 am

பத்ர யோகம்:

ஜாதகத்தில் ஒருவருடைய லக்னத்துக்கு 4, 7, 10 - ம் இடத்தில் புதன் ஆட்சியாக, உச்சமாக இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.

இந்த யோகம் உள்ளவர்கள் சிறந்த கல்வி அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பிலிருக்கும் புதனை, குரு பார்த்தால் பெரும் கல்விமானாகப் பெயர் எடுத்து, கல்வி நிறுவனங்கள் நிறுவி, கல்விப் பணி ஆற்றுவார்கள். அத்துடன் குருவும் சேர்ந்து பலம் பெற்று இந்த அமைப்புள்ளவர்கள் கல்வி மந்திரியாக இருந்தால், அந்த நாட்டின் கல்வி நிலை எல்லா நாடும் போற்றும்படி இருக்கும். அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் கல்வியின் தரம் உயர்ந்து சிறந்த கல்விமான்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். யாருக்கும் பயப்படாமல் அவர் முடிவுகள் எடுப்பார். கல்விச் சாலைகள் பெருகும். அடிப்படை அறிவு மக்களுக்குக் கிடைக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் பெறுவார்.
Astrologer••• 7
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:15 am

ஹம்ஸ யோகம்:

ஜாதகத்தில் குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும் 4,7,10 -ம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும்.

நல்ல நீதிமானாக இருப்பார். இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு மக்களிடம் மதிப்பு இருக்கும். இந்த அமைப்புடன், சூரியனும் செவ்வாயும் பலம் பெற்றால், அந்த ஜாதகர் ஒரு மிகச் சிறந்த ஒரு நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு அரசியல் தலைவராகப் பெயர் எடுப்பார். மக்களிடம் அதிக செல்வாக்கும் உடையவராகத் திகழ்வார். இந்த யோகத்தோடு ராஜ கேந்திரயோகம் எனப்படும் யோகம் ஏற்பட்டால், அதாவது எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் பலமானால், அவரை யாராலும் அசைக்க முடியாத ஓர் ஒப்பற்றத் தலைவனாகப் பெயரெடுப்பார்.
Astrologer••• 8
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:16 am

அரசாளும் யோகம்:

ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று, லக்னத்துக்கு 6, 7, 9 - ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார்.
Astrologer••• 9
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:18 am

சகடயோகம்:

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் 'ஷஷ்டாஷ்டகம்' எனப்படும்.

6, 8- ம் இடங்களில் அமர்ந்தால், இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் அதிக போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதி மிகவும் யோகமாக அமையும்.
Astrologer••• 10
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 6:18 am

கிரகமாலிக யோகம்:

ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு இருபுறமும் வரிசையாக கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.

வாழ்க்கையில் உயர்ந்து சமூக அந்தஸ்துடன் மாலை மரியாதையோடு வாழக்கூடிய சந்தர்ப்பங்களை இந்த யோகம் கொண்டு வரும்
Astrologer••• 11
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 8:24 am

கிரகங்கள் ஒன்றுகொன்று கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ அல்லது கிரகங்களின் சேர்க்கையினை பொறுத்தோ அல்லது கிரகங்கள் நேருக்கு நேர் நிற்கும் அமைப்பினை பொருத்தோ அல்லது கிரகங்களின் சேர்க்கை மற்றும் கிரகங்களின் பரிவர்த்தனையினை பொருத்தும் பல்வேறு வகையான யோகங்கள் ஒருவருக்கு ஏற்படுகிறது.

இந்த அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் யோகம் என்பது அவற்றின் தசா புத்தியில்தான் பரிபூரணமாக வேலை செய்யும் என்பது ஜோதிட விதியாகும். ஒருவருக்கு நாற்பது வயதினை கடந்த பிறகு யாராலுமே எதிர் பார்க்காத யோகங்கள் அவருக்கு உண்டாகும். இவ்வாறு ஏற்படும் யோகம் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு தலைவர்களின் ஜாதகங்களை நாம் உதாரணமாக பார்க்க முடியும் .

ஒருவரது ஜாதகத்தில் சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5 ஆம் வீட்டில் அல்லது 9 ஆம் வீட்டில் குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் தங்களுடைய 40 வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.
Astrologer••• 12
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 8:35 am

மாதுரு நாச யோகம்:
சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருப்பினும் பாவக் கிரகங்களுடன் கூடி இருப்பினும் மாதுரு நாசம் உண்டாகிறது.

பலன்:
தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.
Astrologer••• 13
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 8:37 am

விபரீத ராஜயோகம்:
6 ஆம் அதிபதி 8 அல்லது 12 ல் இருப்பின்
8 ஆம் அதிபதி 6 அல்லது 12 ல் இருப்பின்
12 ஆம் அதிபதி 6 அல்லது 8 ல் இருப்பின்
விபரீத ராஜயோகம் உண்டாகிறது.

பலன்:
சாதாரண நிலையில் வாழ்ந்து வரும் ஒருவர் திடீரென் உயர்ந்த அந்தஸ்து உடையவராக ஆகிறார்.
Astrologer••• 14
avatar

நாஸ்ட்ரடாமஸ்
avatar

நாஸ்ட்ரடாமஸ்

Posts : 223

Likes : 5

Join date : 05/08/2012


on 11/6/2019, 8:40 am

சந்திர மங்கள யோகம்
சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.

பலன்
இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர்.


குரு சந்திர யோகம்
சந்திரனுக்கு 1,5,9 ல் குரு இருக்க, குரு சந்திர யோகம் உண்டாகிறது.

பலன்
உயர்த கல்வியாளர்களாக திகழ்கிறார்கள்.ஆனால் கல்விக்கு தொடர்பில்லாத தொழில் அமைகிறது.

நீச பங்க ராஜ யோகம்
ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது.

பலன்
நீச பங்கம் பெற்றவர்கள் பெரிய சாதனை செய்கின்றனர். சிலர் உலக சாதனை செய்கின்றனர்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்
ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது.

பலன்
ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது.

தர்ம கர்மாதிபதி யோகம்
ஜனன காலத்தில் 9,10 க்கு அதிபதி இனைந்து ஓர ராசியில் இருபினும், ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது.

பலன்
அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும் கிடைக்கிறது.

பரிவர்தனா யோகம்
இரண்டு கிரகங்களோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களோ தங்கள் வீட்டில் இருந்து மற்ற கிரகத்தின் வீட்டிலோ மற்ற கிரகம் தன் வீட்டிலோ இடம் மாறி அமர்ந்திருக்க பரிவர்தனா யோகம் உண்டாகின்றது.

பலன்
பரிவர்தனா பெற்ற கிரகத்தின் தசை அல்லது புத்தியில் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுகிறார். செல்வாக்கு புகழ் அனைத்தும் உண்டாகின்றது.
••• 15

Sponsored content

Sponsored content


You cannot reply to topics in this forum