LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

நவகிரகங்கள்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
அட்டமாதிபதி

அட்டமாதிபதி
அட்டமாதிபதி

அட்டமாதிபதி

Posts : 625

Likes : 14

Join date : 31/07/2012


on 25/7/2014, 7:09 pm

இந்திய ஜோதிடம் ஒன்பது முக்கிய கிரகங்களை கொண்டுள்ளது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகியனவாகும்.

சூரியன்

நவகிரகங்களில் முக்கியமானதும் ஆத்ம காரகன் மற்றும் தகப்பன் காரகனும் சூரியன் ஆகும். சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் இருக்கிறது. ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் சுற்றி மார்ச் 21 ல் மேஷத்திற்குள் மீண்டும் வருகிறது (இந்திய ஜோதிடப்படி ஏப்ரல் 14). இதன் நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், வியாழன். பகை கிரகங்கள் வெள்ளி, சனி ஆகும். புதன் சம கிரகம் ஆகும். இது மேஷம் 10 பாகையில் உச்சம் பெறுகிறது, துலாம் 10 பாகையில் நீசம் பெறுகிறது, சிம்மம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது ஒரு சுபாவ பாப கிரகம் ஆகும். மேலும் இதன் காரக்துவங்கள் உடல் வலிமை, தைரியம், கசப்பு சுவை, நிலம், மோட்சம், ஆத்மா, தந்தை, தந்தையின் நலன்கள், அரசன், அரச உதவி, உயர்ந்த நிலை, மன சுத்தம், அரசாங்கம், பயணங்கள், கோடை, நெருப்பு, கற்கள், புல், காடு, மலை, ஆற்றங்கரை, முகம், கோபம், தலைமை, மருத்துவர், தங்கம், தாமிரம், முத்து, மூங்கில், வெற்றி, சிவப்பு. மருத்துவத்தில் வயிறு, பித்த நீர், வலது கண், காய்ச்சல், எலும்பு, எரிச்சல், தலை நோய், வழுக்கை தலை, பித்த சம்பந்தமான வியாதி, கீழே விழுந்து காயமடைதல், காக்காய் வலிப்பு, நான்கு கால் விலங்குகளால் காயம்.

சந்திரன்

பூமியின் துணை கோள் ஆன சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. இது 29.5 நாட்களில் 12 ராசிகளையும் சுற்றிவிடுகிறது. பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஒருவரின் ஜன்ம ராசியாகும். சூரியன், புதன் இதன் நட்பு கிரகங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி சம கிரகங்கள். இது ரிஷபம் 3 பாகையில் உச்சமும், விருச்சிகம் 3 பாகையில் நீசமும், ரிஷபம் 4-20 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது இயற்கை சுப கிரகமாகும் (வளர்பிறையாக இருந்தால்). இதன் காரகதுவங்கள் தாயார், தாயார் மூலம் கிடைக்கும் நன்மை, அழகு, முக காந்தம், புகழ், மகிழ்ச்சி, வாகனம், மனம், அறிவு, நகைச்சுவை, பெண்களிடம் ஈடுபாடு, நிறைவு, தூக்கம், திரவம், தண்னீர், பால், தயிர், தேன், உப்பு, சுவையான பழம், மீன் மற்றும் நீர்வாழ்வன, பாம்பு மற்றும் ஊர்வன, பூக்கள், வாசனை திரவியம், வெண்மை, துணி, வெள்ளி, பித்தளை, முத்து, அரச முத்திரை, கிணறு, ஏரி, புனிதபயணம், கூச்சம், கனிவு, காதல், கோதுமை, அரிசி, கரும்பு, உப்பு, பிராமணர்கள், வட கிழக்கு, மழை காலம், நடுத்தர வயது.

செவ்வாய்

சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் சூரியனிலிருந்து நான்காவதாக உள்ளது. சூரியனிலிருந்து இதன் தொலைவு 227,900,000 கிலோமீட்டர்களாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் 43 நாட்கள் ஆகிறது. இது மகரம் 28 பாகையில் உச்சமும், கடகம் 28 பாகையில் நீசமும், மேஷம் 0-12 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. சூரியன், சந்திரன், வியாழன் இதன் இயற்கை நண்பர்கள், புதன் எதிரி, வெள்ளி, சனி சம கிரகங்கள். இது சுபாவ பாப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் தைரியம்,சகோதரன், வீரம், கோபம், உடல் வலிமை, ஆக்ரோஷம், போர், ஆட்சி திறமை, ஆயுதங்கள் பயன்படுத்தும் திறமை, தலைமை பண்பு, புகழ், வெற்றி, குரூரம், வாள், அறுவை சிகிச்சை, கத்தி,ஊர் தலைவன், இராணுவ தளபதி, வெப்பம், கோடை காலம், நெருப்பு, பூமி, எரிந்த இடம், தங்கம், தாமிரம், நல்ல உணவு, பேச்சு, பாம்பு, சிகப்பு, இரத்தம், கசப்பு காரம் ஆகியனவாகும்.

புதன்

இது சூரியனை சுற்றும் கோள்களில் முதலாவதாகும். அளவில் சிறிய புதன் இராசியில் சூரியனுடன் இணைந்தோ அல்லது ஒரு ராசி முன் பின்னகவோ எப்பொழுதும் இருக்கும். சூரியன் வெள்ளி இதன் நட்பு கிரகங்கள். சந்திரன் பகை கிரகம். செவ்வாய், வியழன், சனி சம கிரகங்கள். இது கன்னி 15 பாகையில் உச்சம் பெறுகிறது. மீனம் 15 பாலையில் நீச்சம் பெறுகிறது. கன்னி 16-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் கல்வி, அறிவு, இலக்கணம், கணிதம், ஜோதிடம், வான சாஸ்திரம், எழுதுதல், தத்துவ அறிவு, பேச்சு திறன், நுண்ணறிவு, பணிவு, அச்சு தொழில், அமைச்சர், வணிகம், கோவில்,குதிரை, மந்திர தந்திர சாஸ்திரம், அலி, சூத்திரர், இலையுதிர் காலம் , பச்சை நிறம், இளவரசர், இளைஞன், தாய் மாமன், தாய் வழி பாட்டன், மருத்துவர், பட்டை தீட்டுதல் (கற்களுக்கு) ஆகியானவாகும்.

வியாழன் (குரு)

நவக்கிரங்களில் மிகுந்த சுபகிரகம் குருவாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் இதன் நட்பு கிரகங்கள். புதன், வெள்ளி பகை கிரகங்கள். சனி சம கிரகம்.வியாழன் கடகம் 5 பாகையில் உச்சம் பெறுகிறது. மகரம் 5 பாகையில் நீச்சமும் தனுசு 0-10 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகதுவங்கள் வாரிசு, பிள்ளைகள், பேரன், சிஷ்யர்கள், தனம், பொக்கிஷம், வேத பாடம், தத்துவ கல்வி,நீதி, சமஸ்கிருதம், உயர் கல்வி, ஜோதிடம், வானவியல்,இலக்கணம், மத சம்பந்தமான கல்வி, பாட்டனார், ஆசிரியர்கள், புனித இடங்கள், கூறிய அறிவு, ஞானம், எழுத்தாளர், தர்மவான், சுய கட்டுப்பாடு, தவம், நீதிபதி, வேத அறிவு, மஞ்சள் துணி, மஞ்சள் புஷ்பராகம், பசுக்கள், யானைகள், தேர், மூத்த் சகோதரர், நண்பர்கள், வட கிழக்கு திசை ஆகியவற்றை குறிக்கும்.

வெள்ளி (சுக்கிரன்)

பிரகாசமான இந்த கிரகம் வெறும் கண்களில் நன்கு தெரியக்கூடியது. சூரிய உதயதின்போதும் அஸ்தமனத்தின்போதும் அடிவானில் தென்படும். இது சுபாவ சுப கிரகம் ஆகும். புதன், சனி ஆகியவை இதன் நண்பர்கள், சூரியன், சந்திரன் இதன் எதிரிகள். செவ்வாய், வியாழன் சம கிரகங்கள். சுக்கிரன் மீனம் 27 பாகையில் உச்சம் பெறுகிறது. கன்னி 27 பாகையில் நீசம் பெறுகிறது. துலாம் 0-15 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன காரகதுவங்கள் மனைவி, பெண், திருமணம், மனைவியின் மூலம் இன்பம், கம களியாட்டங்கள், காதல், சோரம் போதல்,பல பெண்களுடன் தொடர்பு,அழகு, வாசனை பொருள் வியாபாரம், வேலையாட்கள்,அரச சன்மானம், ஆபரணங்கள், வைரம், பஞ்சு, கலை, இசை, நடனம், பாட்டு, கவிதை, நாடகம், வாகனம், யானை, குதிரை, பசு, வீணை, புல்லங்குழல் வாசித்தல், வசந்த காலம், தென்கிழக்கு திசை, மத்திம வயது, விவசாயம், படுக்கை அறை, வெண்மை,நெய், தயிர், தங்கம், வெள்ளி, நல்ல உணவு, வைசியர் ஆகியனவாகும்.

நவகிரகங்களில் தொலைதூரத்தில் சுற்றிவருவது சனியாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகின்றது. கருமை நிறத்தை குறிக்கிறது. புதன், சுக்கிரன் இதன் நட்பு கிரகங்களாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் எதிரிகளாகும். வியாழன் சம கிரகமாகும். இது துலாம் 20 பாகையில் உச்சம் பெறுகிறது. மேஷம் 20 பாகையில் நீசம் பெறுகிறது. கும்பம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன் காரகதுவங்கள் ஆயுள், துன்பம், நோய், தடங்கள், வருத்தம், அவமானம், அடிமை தன்மை, கோழைத்தனம், தண்டனை, அசிங்கம், அழுக்கு துணி, அலி, சட்டம் மற்றும் நீதித்துறை அறிவு, உலக இன்பங்களை வெறுத்தல், சூத்திரர்கள், பிச்சை, தீயவர்களுடன் சேர்க்கை, நாடோடி, எருமை, இரும்பு, கருப்பு நிற தானியங்கள்,சாம்பல் , விவசாயம், வேலைக்கரன் ஆக இருத்தல்.


1. சூரியன்

ஜாதி: ஷத்ரியர்
குணம்: சாத்விக
சமூகநிலை: அரச
பாலினம்: ஆண்
உறுப்பு: எலும்பு
திசை: கிழக்கு

2. சந்திரன்

ஜாதி: வைசிய
குணம்: சாத்விக
சமூகநிலை: அரச
பாலினம்: பெண்
உறுப்பு: இரத்தம்
திசை: வடமேற்கு

3. செவ்வாய்

குணம்: ஷத்ரிய
குணம்: தாமச
சமூகநிலை: இராணுவ தளபதி
பாலினம்: ஆண்
உறுப்பு: எலும்பு மஜ்ஜை
திசை: தெற்கு

4 புதன்

குணம்: வைசிய
குணம்: ரஜஸ்
சமூகநிலை: இளவரசர்
பாலினம்: அலி
உறுப்பு: தோல்
திசை: வடக்கு

5. வியாழன்

குணம்: பிராமணர்
குணம்: சாத்விகம்
சமூகநிலை: அமைச்சர்
பாலினம்: ஆண்
உறுப்பு: கொழுப்பு
திசை: வடகிழக்கு

6 சுக்கிரன்

குணம்: பிராமணர்
குணம்: ரஜஸ்
சமூகநிலை: அமைச்சர்
பாலினம்: பெண்
உறுப்பு: சுக்கிலம்
திசை: தென்கிழக்கு

7 சனி

குணம்: சூத்திரர்
குணம்: தமஸ்
சமூகநிலை: வேலைக்காரர்
பாலினம்: அலி
உறுப்பு: நரம்பு
திசை: மேற்கு


ராகு-கேது

இந்திய ஜோதிடத்தில் ராகு கேதுகள் இடம் பெறுகின்றன. மற்ற கிரகங்கள் போல் அவை பரு பொருட்கள் அல்ல. நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் எனப்படும் இவை கணித புள்ளிகள் (Mathematical points) ஆகும். இது சந்திரனின் சுற்றுப்பாதை (orbit) ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதையை வெட்டும் இடமாகும். Ascending Node எனப்படும் ராகு சந்திரனின் சுற்றுவட்ட பாதை (படத்தில் நீல நிறத்தில் இருப்பது) தெற்கிலிருந்து வடக்காக ecliptic ஐ குறுக்கிடும்போது உண்டாகிறது. அதே போல் கேது எனப்படும் Descending Node சந்திரனின் பாதை வடக்கிருந்து தெற்காக ecliptic ஐ வெட்டும்போது நிகழ்கிறது. கிரகணங்கள் ஏற்படுவது இந்த சமயங்களில்தான். அமாவாசை சமயத்தில் சந்திரன் இந்த புள்ளி (node) வழியாக செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதுபோல் பெளர்ணமி சமயத்தில் சந்திரன் இந்த புள்ளியில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் வரும்போது ஏற்படுகிறது. பெளர்ணமி என்பது சந்திரன் சூரியனுக்கு 180 பாகையில் இருக்கும்போது ஏற்படுகிறது. ராகு கேதுக்கள் எப்பொழுதும் 180 பாகை இடைவெளியில் உள்ளன. மேலும் இவை எதிர் கடிகார சுற்றில் சுற்றுகின்றன.

புதன் சுபகிரகங்களுடன் கூடினால் சுப பலன் தரும். பாவிகளுடன் இணைந்தால் சுப பலன் தராது. வளர்பிறை சந்திரனும் (வளர்பிறை 8வது திதிக்கு மேல், தேய்பிறை 8வது திதி வரை), குருவும், முழு சுப கிரகங்கள், சுக்கிரன் முக்கால் பங்கு சுப கிரகம், புதன் அரை பங்கு சுப கிரகம், தேய்பிறை சந்திரன் கால் பங்கு சுப கிரகம்.சனி, ராகு, கேது இயற்கையில் முழு பங்கு பாவிகள். செவ்வாய் முக்கால் பங்கு பாவ கிரகம். சூரியனும் பாவிகளுடன் கூடிய புதனும் அரை பங்கு பாவர்கள். பாபருடன் கூடிய தேய்பிறை சந்திரன் கால் பங்கு பாவி. அமாவாசை காலத்தில் சூரியன் சந்திரன் இணைந்திருக்க அவருடன் புதன் சம்பந்தபட்டால் முக்கால் பங்கு சுபர்.

ஒரு கிரகம் ராசியில் உச்ச வீட்டிலும், அம்சத்தில் உச்சம் பெற்றாலும், ஆட்சி பெற்றாலும், அம்சத்தில் ஆட்சி பெற்றாலும், சுபகிரகங்களுடன் இணைந்தாலும், பர்க்கபட்டாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், நட்பு கிரகத்துடன் இருந்தாலும், நற்பலன் தரும். ஜாதகத்தில் 1,4,7,10 ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானம் எனப்படும். அது போல் 1,5, 9 ஆகிய வீடுகள் திரிகோண ஸ்தானம் எனப்படும். 2,5,8,11 ஆம் இடங்கள் பணபர ஸ்தானம் எனப்படும். 3,6,9,12 ஆகிய இடங்கள் அபோக்லிமம் எனப்படும். உபஜெய ஸ்தானம் என்பது 3,6,10,11 ஆகிய இடங்களாகும்.

கிரக அவஸ்தை

கிரகங்கள் சுற்றிவரும் போது 'அவஸ்தை' நிலைக்கு ஆளாகின்றன. மொத்தம் 10 வகை அவஸ்தை நிலைகள் உள்ளன. ஒற்றை படை ராசிகளில் (odd signs) முதல் 6 பாகை பால பால அவஸ்தை, அடுத்த 6 பாகைகள் (7-12) குமார பருவம், அடுத்த 6 பாகைகள் (13-18) யெளவன பருவம், அடுத்த 6 பாகைகள் (19-24) கில பருவம், கடைசி 6 பாகைகள் (19-24) இறந்த பருவம் என்று கொண்டு அந்தந்த ராசிகளில் உள்ள கோள்களின் பலனை அறிய வேண்டும். இரட்டை ராசிகளில் (even signs) இந்த அவஸ்தைகள் முதல் 6 பாகைகள் இறப்பு என ஆரம்பித்து தலை கீழாக பலன் தருகின்றன. இதில் பாலவஸ்தையில் குறைந்த 1/4 பங்கும், குமார அவஸ்தையில் 1/2 பங்கும், வாலிப பருவத்தில் முழு பலனும், கிழ பருவத்தில் உள்ள கோள்கள் கெட்ட பலனும், இறப்பு பருவத்தில் உள்ள கோள்கள் இறப்புக்கு சமமான பலனும் தருகின்றன.

வக்கிர கதி, அஸ்தங்கம்

சூரியனுடன் ஒரே ராசியில் இணைந்த கோள் அஸ்தங்கம் (combust) அடைகிறது. அஸ்தங்கம் அடைந்த கோள் நற்பலன் தராது. ராகு- கேதுவை தவிர கிரகங்கள் பொதுவாக கடிகார சுற்றில் சுற்றுகின்றன. இப்படி சுற்றும் கிரகம் நின்று எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்தால் அந்த கிரகம் வக்கிர கதியில் (retrograde motion) இருப்பதாக கொள்ளலாம். சூரியன், சந்திரன், ராகு, கேது இவர்களுக்கு வக்கிர கதி கிடையாது. சூரியனுக்கு அஸ்தங்கம் கிடையாது. சூரியனிலிருந்து 2 ல் உள்ள கோள் அதிசாரம் அடைகிறது. 3 ஆம் ராசியில் சமகதி அடைகிறது. 4 ஆம் இடத்தில் மந்த கதி அடைகிறது. 5,6 வது ராசிகளில் உள்ள கோள் நேர் கதி அடைகிறது. 7,8 ஆம் இடங்களில் உள்ள கோள் வக்கிர கதி அடைகிறது. 9 ஆம் இடத்தில வக்கிர கதி அடைகிறது. 10 ஆம் இடத்தில வக்கிர நிவர்த்தி அடைகிறது. மீண்டும் 11,12 ஆம் இடங்களில் அதிசாரம் எனும் வேக கதியை அடைகிறது.

ஷட்பலம்

ஷட்பலம் என்பது ஆறுவகை பலமாகும். அவை ஸ்தானபலம், திக் பலம், சேஷ்ட பலம், கால பலம், திருக் பலம், நைசர்கிக பலம் என்பனவாகும். ஷட்பலம் அறிவதன் மூலமே கிரகத்தின் உண்மையான வலிமையை அறிய முடியும். மேலும் பாவ பலத்தையும் அறிய வேண்டும். இதன் பிறகே ஜாதகத்தின் பலாபலன்களை சரியாக கணிக்க முடியும். இதை கணிக்க விரிவான ஜோதிட அறிவும் ஓரளவு கணித அறிவும் அவசியம்.
You cannot reply to topics in this forum