காலக்கணக்கின் அடிப்படை அறுபது நொடி கொண்டது ஒரு விநாடி. அறுபது விநாடி கொண்டது ஒரு நாழிகை. அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள். முன்னூற்று அறுபது நாள் கொண்டது ஒரு (சாந்திரமான) வருடம். (Lunar Year) ஆகவே ஒரு வருடத்தில் 21, 600 நாழிகைகள் உண்டாம்.
எமக்கு ஒரு நாளில் நடக்கும் சுவாசமும் 21,600. இது சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதி. சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் உள்ள பொன்ஓடுகளின் எண்ணிக்கை 21, 600. இந்த பொன் ஓடுகளைத் தைத்துப் பொருத்தியுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72, 000. இது எமது உடலில் உள்ள 72, 000 நாடிகளைக் குறிக்கின்றது.
360 மானுட வருடங்கள் = ஒரு தேவ வருடம். இவ்வாறு 4000 தேவ வருடங்கள் கிருத யுகம்; இதனோடு 400 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; நானூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 4800 தேவ வருடங்கள் கொண்டது கிருத யுகம்.
3000 தேவ வருடங்கள் திரேதா யுகம்; இதனோடு 300 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; முன்னூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 3600 தேவ வருடங்கள் கொண்டது திரேதா யுகம்.
2000 தேவ வருடங்கள் துவாபர யுகம்; இதனோடு 200 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 200 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 2400 தேவ வருடங்கள் கொண்டது துவாபர யுகம்.
1000 தேவ வருடங்கள் கலி யுகம்; இதனோடு 100 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 100 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 1200 தேவ வருடங்கள் கொண்டது கலி யுகம்.
முன் சொன்ன சிதம்பர இரகசிய இலக்கமான 21, 600 ஐ 80 ஆல் பெருக்க வருவது கிருத யுக வருடங்கள். இது பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் (17, 28, 000) மானுட வருடங்கள். இந்த 21, 600 ஐ 60 ஆல் பெருக்க வருவது திரேதா யுக வருடங்கள். இது பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் (12, 96, 000) மானுட வருடங்கள். இந்த 21, 600 ஐ 40 ஆல் பெருக்க வருவது துவாபர யுக வருடங்கள். இது எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் (8, 64, 000) மானுட வருடங்கள். இந்த 21, 600 ஐ 20 ஆல் பெருக்க வருவது கலி யுக வருடங்கள். இது நான்கு இலட்சத்து முப்பது இரண்டாயிரம் (4, 32, 000) மானுட வருடங்கள். அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களையும் சேர்த்து ஒரு சதுர் யுகம் என்பர்.
பன்னீராயிரம் 12,000 தேவ வருடம் = நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் 43,20,000 மானுட வருடங்கள் = ஒரு சதுர் யுகம். எல்லாவற்றினது கணக்கும்; எமது சுவாசத்தில் இருந்து அண்ட சராசரங்களின் கால எல்லை வரை, சிதம்பர இரகசியத்தில் அடங்கும்.
60 நொடி அல்லது தற்பரை = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை 24 நிமிடம்) (2-1/2 நாழிகை = 1 மணி)
60 நாழிகை = 1 நாள் 360 நாள் = 1 சாந்திர வருடம்
365நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி = 1 சௌரமான வருடம் 360 சௌரமான வருடங்கள் = 1 தேவ வருடம் சதுர் யுகங்கள் 4800 தேவ வருடங்களைக்கொண்டது கிருத யுகம். 3600 தேவ வருடங்களைக் கொண்டது திரேதா யுகம். 2400 தேவ வருடங்களைக் கொண்டது துவாபர யுகம். 1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலி யுகம். அடுத்தடுத்து வரும் இந்த் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு சதுர் யுகம். 1. கிருத யுகம்; 4800 தேவ வருடங்கள் = பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்கள் (17, 28, 000 = 1.728 million years). 2. திரேதா யுகம்; 3600 தேவ வருடங்கள் = பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் வருடங்கள் (12, 96, 000 = 1.296 million years). 3. துவாபர யுகம்; 2400 தேவ வருடங்கள் = எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் வருடங்கள்(8, 64, 000 = 0. 864 million years). 4. கலி யுகம்; 1200 தேவ வருடங்கள் = நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் வருடங்கள் (4, 32, 000 = 0. 432 million years). சதுர் யுகம்- 4800 + 3600 + 2400 + 1200 = 12, 000 தேவ வருடங்கள் = நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் மானுட வருடங்கள் (43, 20, 000 வருடங்கள் = 4. 32 million years). பிரம்மாவின் நாள் இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது உலகைப் படைக்கும் பிரம்ம தேவனின் ஒரு பகற் பொழுதாகும். அதுபோல ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மதேவனுக்கு ஒரு இராக்காலமாகும். ஆக மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்.
-பகவத் கீதை 8.17- இந்திரனின் காலம் இவ்வாறு பிரம்மாவின் ஒரு நாளில் சுவர்க்க லோகத்துக்கு 14 இந்திரர்கள் வந்து இருந்து ஆண்டு மாளுவர். ஒரு பகலிலே 420 இந்திரர்கள் மாளுவர். ஒரு வருடத்திலே 5040 இந்திரர்கள் மாளுவர். இவ்வாறு ஒரு பிரம்மாவின் ஆயுட்காலத்தில் 540,000 இந்திரர்கள் வந்து போவர். இது விஷ்ணுவின் ஒரு நாளாகும். இவ்வாறு விஷ்ணுவின் ஒரு ஆயுட்காலம் உருத்திரனின் ஒரு நாளாகும். -சிவ மகா புராணம் - கற்ப காலம் பிரமதேவனின் பகற்காலத்தில் படைப்பும், இராக்காலத்தில் பிரளயமும் உண்டாகின்றன. அந்தப்பிரளய காலத்தில் பூலோகம், புவர லோகம், சுவர்க்க லோகம் ஆகிய மூன்று உலகங்களும் அழிந்து விடுகின்றன. பலர் பூலோகம் என்பது எமது பூமியைக் குறிக்கின்றது என்று தவறாக எண்ணுகிறார்கள். பூலோகம் என்பது நாம் வாழும் பூமி உள்ளடங்கிய புவனத்தொகுதி (Galaxy)முழுமையையும் குறிக்கும்.
பூமி உட்பட்ட கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவது நாம் அறிந்ததே. இந்த சூரியன் உண்மையில் ஒரு நட்சத்திரம். இந்த சூரியனாவது ஒரு இடத்தில் நிலையாக நிற்கின்றானா என்றால் இல்லை. சூரியனும் அதன் கிரகங்களுடன் சேர்ந்து தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு எமது சூரியக் குடும்பம் உள்ள ஆகாய கங்கை எனப்படும் பால்வீதியில் சூரியனைப்போல 2000 பில்லியன் நட்சத்திரங்களுக்கு மேல் உள்ளன. இவையெல்லாம் சுழற்சியாகச் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன என்றும் இன்றைய அண்டவியல் விஞ்ஞானம் கூறுகின்றது. இவை இவ்வாறு எதைச் சுற்றும் அச்சு என்பது இன்றைய விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் எமது சைவ நூல்கள் இவ்வாறு சூரியன் உள்ளிட்ட நடசத்திரங்களும், கிரகங்களும் சந்திரர்களும் சுற்றி வரும் அச்சை மகாமேரு என்று கூறுகின்றன. இந்த அச்சை சுழற்சியின் (Spiral) மையமாக உள்ள மலை என்று வர்ணிக்கின்றன.
'உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு' என்று 11ம் திருமுறையான திருமுருகாற்றுப்படை சூரியன் மேருவை வலம் வருவதாகக் கூறுகின்றது.
'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்' என்று ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சூரியன் மேருவை வலம் வருவதாகக் கூறுகின்றது.
இவற்றில் இருந்து எமது பூலோகம் முழுவதுக்குமான சுழற்சிக்குரிய அச்சே மேரு என்று தெரிகின்றது. இதேபோல புவர் லோகம், சுவர்க்க லோகம் என்பவை வேற்று புவனங்களாம் (parallel galaxies). காயத்திரி மந்திரமும் 'ஓம் பூர் புவ ஸுவ' என்றே தொடங்குகின்றது. இவற்றுள் புவர் லோகம் இன்றைய விஞ்ஞானம் கூறும் எமது புவனத்தொகுதிக்கு அடுத்துள்ள அன்ட்றோமீடா புவனத்தொகுதியாக (Andromeda Galaxy) இருக்கலாம். பிரமனின் இரவுக்காலத்தில் நிகழும் இந்த மூன்று புவனங்களினதும் பிரளயத்தை நைமித்திகப் பிரளயம் என்பார்கள். பின்னர் பிரமதேவனின் பகற்காலத்தில் பூலோகம், புவர் லோகம், சுவர்க்க லோகம் ஆகிய உலகங்களின் படைப்பு மீண்டும் தொடங்குகின்றது. மற்றெல்லா உலகங்களும், அண்டங்களும் முன்போலவே இருக்கின்றன. இவ்வாறாக பிரமதேவனின் ஒரு பகற்காலத்தை ஒரு கற்ப காலம் என்பர்.