LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சோதிடக்கலை

Posted in: 'அட்டமாதிபதி'

Admin••• 1
Admin

Admin
Admin

Admin

Posts : 48

Likes : 3

Join date : 2012-07-31


31/7/2012, 12:24 am

சோதிடக்கலை தொடர்பான அடிப்படை விளக்கங்கள், கருத்துக்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவை இந்த தளத்தில் இடம்பெறும். மேலும் ஜாதகம் கணிப்பது, சோதிடப் பலன் சொல்வது தொடர்பான நுணுக்கங்கள், சூட்சுமங்களளைக் முறைப்படி கற்றுக்கொண்டு தொழில் செய்யும் விருப்பம் உள்ளவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக இணைந்து குறைந்த கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். ஐந்து முக்கிய பகுதிகளாகப் பிரித்து பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த 2007ம் ஆண்டு முதல் இணையதளத்தில் ஜோதிடம் தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றின் தொகுப்பாக இனிமேல் இங்கே தொடர இருக்கிறேன்... சோதிடம் குறித்த கட்டுரைகளுக்கான நாஸ்ட்ரடாமஸ் என்ற புனைப்பெயரில் பயனிக்க இருக்கிறேன்!

அன்புடன்,
தமிழ் நாஸ்ட்ரடாமஸ்
(காலக் கணித ஆய்வாளர்)

"ஜனனி ஜன்ம செளக்யானம், வர்த்தனி குல சம்பதம் பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா"

ஒவ்வொரு ஜாதகத்தின் தொடக்கத்திலும் இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கும். அதாவது இந்த ஜன்மத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மை, தீமைகள் அவன் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிரம்மாவால் கணிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அது ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சங்கேதமாக குறிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் பொருள்.

ZODIAC எனப்படும் இராசி மண்டலம் பூமியை சுற்றியுள்ள 360 பாகை சுற்றளவுள்ள கற்பனையான 18 பாகை அகலமுள்ள பகுதியாகும். இதன் மையத்தில் ecliptic எனப்படும் சூரியனின் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருசிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியனவாகும். இந்த 12 ராசிகளே ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளாகும். ஒருவர் பிறக்கும் போது உள்ள கிரக நிலைகள் ராசி கட்டத்தில் குறிக்கப்படுகிறது. உதரணத்திற்கு ஒருவர் பிறக்கும்போது சூரியன் 70 பாகையில் இருந்தால் அது மிதுன ராசியில் 10 பாகை வரை உள்ளது. (30 பாகை மேஷம் + 30 பாகை ரிஷபம் முடிந்து மிதுனத்தில் 10 பாகை). மேலும் இராசி மண்டலம் 13.3333 பாகை அளவுள்ள 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் பிறக்கும்போது கீழ்வானத்தில் (Eastern horizon) உதயமாகும் இரசியே ஜனன லக்கினமாகும். பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் உதய ராசி மாறிக்கொண்டே இருக்கும். இது ஜாதகத்தில் "ல" என்று குறிக்கப்படும். லக்கினம் மிக முக்கியமாகும். லக்கினமே ஜாதகத்தில் முதல் வீடு / இலக்கின பாவமாகும். சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.

பட்சி தெரிந்தவனை பகைத்துகொள்ளாதே. ஓரை பார்த்து நடந்தால் துன்பமில்லை என்பது முன்னோர் சொன்ன சோதிட மொழி.

பிறந்த நேரமும் தேதியும் அன்றைய பிரபஞ்ச கிரக அமைப்புகளை சொல்லும் கட்டங்கள்.அவைதான் கிரக அசைவுகளை கொண்டு ஒரு மனிதனின் வாழ்நாள் பலன்களை கணிக்க உதவுகிறது.

ராமயணத்தில் ராமனும் தன் பிறந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் வரும் நாளில் போர் தொடௌத்தால் வெற்றி என கணக்கிட்டு உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் போர் தொடுத்து வெற்றி கண்டான் என கம்பரே சொல்கிறார்.

புராணம், இதிகாசம், வரலாறு, உலக இலக்கியம் எதிலும் சோதிடம் எனும் காலக்கணிப்பு இல்லாமல் எதுவும் நடந்ததில்லை.

Message reputation : 100% (2 votes)
You cannot reply to topics in this forum